அம்பலமாகும் தமிழக அரசின் நிதிநிலை...! ஆக.9ல் 120 பக்கம் வெள்ளை அறிக்கை வெளியீடு... நிதியமைச்சர் பிடிஆர்...
சென்னை:
தமிழக அரசின் நிதிநிலை குறித்த 120 பக்க வெள்ளை அறிக்கையை வரும் 9ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி செய்த நிலையில் தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது.
வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.
120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில்
கடன் விவரங்கள், குடிநீர்,
மின்வாரியம்,
போக்குவரத்து துறையின் வரவு-செலவு,
வருவாய் இழப்புக்கான காரணம் உள்ளிட்டவை வெளியாகும்.
இதனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின் உண்மை நிலை அம்பலமாகும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்..
வெள்ளை அறிக்கை என்ற பெயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளை அறிக்கை என்பது ஒரு ஜனநாயக கருவி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது.
வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியோ அல்லது பிரச்னைகள் பற்றியோ முழுமையாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட சிக்கல் குறித்தோ அல்லது பொருள் குறித்தோ நிபுணரின் தீர்வும் பரிந்துரையும் கொண்டதாக இருக்கும்.
ஒரு சிக்கலை புரிந்து கொள்ளவோ, சிக்கலை தீர்க்கவோ, அல்லது முடிவெடுக்கவோ வெள்ளை அறிக்கை வழிவகை செய்கிறது. இந்த ஆவணத்தின் வெளிப்புற பக்கங்கள் வெள்ளை நிறத்தால் இருக்கும் என்பதால் இதற்கு வெள்ளை அறிக்கை என பெயர் வந்தது.

No comments
Thank you for your comments