Breaking News

செப்டம்பர் 30 வரை கொரோனா கட்டுப்பாட்டு அமல் - மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி:   

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் முதல்  ஊரடங்கு அமலானது. இதனால், நாடு முழுவதும் பேருந்து, ரயில் மற்றும் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கோவில்கள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவையும் அடைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது. இதற்கிடையே, நடப்பு ஆண்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் காணப்பட்டன. அதிக இறப்புகளும்  நிகழ்ந்தன... இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இதனால்  மத்திய-மாநில அரசுகள் மிகவும் கவனமுடன் கொரோன கட்டுபாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

3வது அலை அதிகரிக்கவோ, இழப்புக்கள் ஏற்படா வண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் கட்டுபாடுகளையும் தளர்வுகளையும் கையாண்டு வருகின்றனர். கொரோன தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் விரைவுபடுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பு ஆண்டில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண் சட்டம் 2005-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

No comments

Thank you for your comments