ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி- வெளியான அறிவிப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு (23.8.2021 வரை) நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6-8-2021) அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது
இது குறித்து முதலமைச்சர் மு.க.வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments