கன்னக்களவில் ஈடுபட்ட குற்றவாளி கைது- 15 சவரன் தங்க நகைகள் மீட்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரி க/பெ. தீனதயாளன், மற்றும் விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அஷ்டபுஜ பெருமாள் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த இராஜகுமாரி க/பெ.ராமதாஸ் ஆகியோரது வீடுகளில் கடந்த 12.08.21 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம். சுதாகர், அவர்கள் எதிரிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டதின் காரணமாக உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரி பிரபாகர் ( 38 ) த/பெ.முத்து நெ.10, ஆதிமூலம் தெரு, கலைஞர் நகர், பெருங்களத்தூர் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து சுமார் 5 இலட்சம் மதிப்புள்ள 15 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்டு விரைவாக எதிரியை கைது செய்த உதவி ஆய்வாளர் தாமோதரன் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் வெகுவாகப் பாராட்டினார்.

No comments
Thank you for your comments