குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரா ( எ ) வீரபத்திரன் (33) பெ.தயாளன், வி.ஆர்.பி.சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டு தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததார்.
அதேபோல், தொடர்ந்து அசரால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றுவந்த சீனு ( எ ) சீனுவாசன் (46) த/பெ.ராம்பிரசாத், பஜனை கோயில் தெரு, அம்பேத்கர் நகர், கீவளூர் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் என்பவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததார்.
மேற்கண்ட இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி, மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில ( GOONDAS ) வைக்க நேற்று (24.08.2021) உத்தரவு பிறப்பித்துள்ளார்.


No comments
Thank you for your comments