வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு UYEGP மூலம் கடனுதவி
கடலூர், ஜூலை 29-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு UYEGP மூலம் கடனுதவி மூலம் கடனுதவி பெறலாம் என்று மாவட்டஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு UYEGP மூலம் கடனுதவி தொழில்வணிகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்டதொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் 2021-22ம் ஆண்டிற்கு கடலூர் மாவட்டத்திற்கு 320 பயனாளிகளுக்கு ரூ.300.00 இலட்சம் மானியமாக இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் பெற தேவையான தகுதிகள்
1. குறைந்தபட்சகல்வித் தகுதி : 8ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. வயதுவரம்பு : குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள்இருக்கவேண்டும்
இதரபிரிவினர்/பெண்கள்/ ஊனமுற்றோர்/முன்னாள் இராணுவத்தினர் 45 வயதுக்குள்இருக்கவேண்டும்.
3. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000/க்கு மிகாமல்இருக்கவேண்டும்
4. முன்னுரிமை : பெண்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதிகபட்ச கடன் தொகை
உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.15.00 இலட்சம், சேவை மற்றும் வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு ரூ.5.00 இலட்சமும் கடன் தொகையாக வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
இதில் திட்ட அறிக்கையில் 10% தொகையினை பொதுப்பிரிவினர் விளிம்புத் தொகையாக செலுத்தவேண்டும். தாழ்த்தப்பட்டவர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / பெண்கள் / முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் / திருநங்கைகள்ஆகியோர் 5% விளிம்புத் தொகையாக செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீட்டில் 25% மானியமாக அதாவது அதிகபட்சம் ரூ.250000/- தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
கடன் வழங்கப்படும் தொழில்கள்
இலாபகரமான அனைத்து விதமான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு (நேரடி விவசாயம் தவிர) கடன் வழங்கப்படுகிறது.
இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணைய தளமுகவரியில் விண்ணப்பிக்கலாம். கோவிட்-19 காரணமாக நேர்முகத் தேர்வின்றி தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்ட தொழில்மையம், கடலூர் அவர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் மாவட்டஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகார பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க ...
No comments
Thank you for your comments