ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி அறிவிப்பு
ஈரோடு, ஜூலை 29-
ஈரோடு மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நகர்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நகர்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Name of the Post - UHN / ANM
No. of the Post - 8
Salary - Rs.8000/-
Education Qualification
a. For those who have acquired Auxiliary Nurse Midwife/Multi-purpose Health Workers (Female) Course.
b. For those who have acquired Auxiliary Nurse Midwife/Multi- purpose Health Workers (Female) Qualification after 15.11.2012 +2 with 2 years Auxiliary Nurse Midwife/Multi-purpose Health Workers (Female) Course.
c. Having a certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council
d. Must possess physical fitness for camp life.
இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. மேலும், இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 10-ஆம் வகுப்பு மதிப்பெண் (20%), 12-ஆம் வகுப்பு மதிப்பெண் (30%) மற்றும் தகுதி பெறும் பட்டையப்படிப்பில் பெற்ற மதிப்பெண் (50%) ஆகியவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்த விவரங்களை அலுவலக வேலை நாட்களில் பொது சுகாதாரப்பிரிவில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.08.2021
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம்,
மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு - 638 001.
No comments
Thank you for your comments