Breaking News

ஜீவன் ரக்ஷாபதாக் விருது பெற... விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் 

கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷாபதாக் 2021 என்ற தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.



கடலூர்  மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷாபதாக் 2021 என்ற தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதானது பாராட்டுதலுக்கு உரிய செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், மின்சார விபத்து நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும்  சுரங்க விபத்திலிருந்து மனிதர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருதானது மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது.

1.  சர்வோட்டம் ஜீவன் ரக்ஷாபதாக்

2 .உத்தம் ஜீவன் ரக்ஷாபதாக்

3.  ஜீவன் ரக்ஷாபதாக்

மேற்கண்ட வகைகள் கொண்ட விருதுகள் பெறத குதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர்  என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 04.08.2021க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு கடலூர்  மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்ரமணியம்  தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments