கர்ப்பிணிகளுக்கு முதல் கொரோனா தடுப்பூசி முகாம்... உதயநிதி ஸ்டாலின்
திட்டக்குடி :
தமிழ்நாட்டில் முதல்முறையாக கடலூர் பெண்ணாடம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசியிடும் முகாம் தொடக்கம். மேலும் திட்டக்குடியில் கொரோனா சிகிச்சை மையத்தை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து 2500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலூர் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில இளைஞரனி செயலாருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக சுகாதார துறை அமைச்சர் சுப்ரமனியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேப்பாக்கம் திருவல்லிக்னி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் முதல் கட்டமாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில்தான் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொல்லும் நிகழ்ச்சியை சுகாதார துறை அமைசர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார் என்று பேட்டியளித்தார்.
அதனை தொடர்ந்து திட்டக்குடியில் உள்ள சட்டமன்ற அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கொரோனா வாடு மையத்தை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திட்டக்குடி தனியார் பள்ளி வளாகத்தில் 2500 குடும்ப அட்டைதாரருக்கு நலதிட்ட பொருட்களை வழங்கினார்கள்.
பின்னர் திட்டக்குடி பகுதியில் உள்ள வெலிங்டன் ஏரியை பார்வையிட்டார்.
உடன் எம்பி டிஆர்வி ரமேஷ், எம்எல்ஏ ஐயப்பன், மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், வட்டாட்சியர் தமிழ்செல்வி, காவல் ஆய்வாளர் அன்னக்கொடி, ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டை நகர செயலாளர் விபிபி பரமகுரு, நகர இளைஞரணி செயலாளர் சேதுராமன், மற்றும் கட்சியினர் பலர் இருந்தனர்.










No comments
Thank you for your comments