Breaking News

மனு அளித்த அரை மணி நேரத்தில் வட்டாட்சியர் சிவகுமார் அதிரடி...!


விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே பழைய பட்டினம் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பெயர் பலகையை மனு அளித்த அரை மணி நேரத்தில் வட்டாட்சியர் சிவகுமார் அகற்றினார். உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு  விசிகவினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் பெயர்பலகை வைக்கப்பட்டதாக கிராமமக்கள் சில தினங்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை அருகே உள்ள பெயர் பலகையை அகற்றக்கோரி சமூக ஆர்வலர் பழையபட்டினம் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டீபன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் ராஜ்குமார் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்களிடம் பழையபட்டினம் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற பெயர் பலகையை அகற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக மனு கொடுத்துள்ளனர்.

இதனை பரிசீலனை செய்த தாசில்தார் உடனடியாக அம்பேத்கர் சிலை அருகில் இருந்த பெயர்பலகையை அரைமணி நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெயர் பலகையை அகற்றினார்.

 அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட தாசில்தார் சிவக்குமார் அவர்களை விடுதலை சிறுத்தைகள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் மனதார பாராட்டுக்களையும் நன்றியையும்  தெரிவித்தனர்

No comments

Thank you for your comments