Breaking News

கம்யூனிட்டி ரைசிங் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்...

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில்  கொரானா  தடுப்பூசி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


விழுப்புரம் கம்யூனிட்டி ரைசிங் அறக்கட்டளை, கடலூர் மாவட்ட சுகாதார துறை மற்றும் மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனை சார்பில், திருத்தல அதிபர் பங்குத்தந்தை தேவசகாயராஜ், உதவி திருத்தல அதிபர் ஒளில்குமார், மூ.பரூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொரோனா முகாம் துவக்கி வைத்தார்கள்.

இதில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள  தடுப்பூசியினை கடலூர் மாவட்ட சுகாதார துறை மற்றும் மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவர் சங்கீதா, செவிலியர் விஜயலட்சுமி, சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசியினை 300க்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தினர்.

இதில் கோணாங்குப்பம் கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, ஆதார் அட்டையுடன் ஆர்வமாக வந்து தடுப்பூசியினை போட்டுக்கொண்டனர்.

பின்பு அவர்களுக்கு விழப்புரம் கம்யூனிட்டி ரைசிங் அறக்கட்டளை நிர்வாகி நெல்சன்  முக கவசம், கபசுர குடிநீர், 5 கிலோ அரிசி உள்ளிட்டவைகளை வழங்கினர் இதில் விழுப்புரம் கம்யூனிட்டி ரைசிங் அறக்கட்டளை செபஸ்டின், ஆல்பர்ட், சீனு, செபஸ்டின் ராஜ், ஊராட்சி செயலர் செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments