கோஷ்டி மோதல் பொய்வழக்கு... பூச்சு மருந்து குடித்ததால் பரபரப்பு....
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த இரு கோஷ்டியினர் இடையே மோதல் பொய்வழக்கு கொடுத்ததாக கூறி மனவேதனை அடைந்த ஒருவர் மருந்து குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு கோஷ்டியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு விருந்தாசலம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுப்பது வழக்கமான நிலையில் இன்று அதே கிராமத்தில் சுந்தரம், வரதராஜ், பாக்யராஜ், எம் ஆர் ராதா, சுந்தர் ஆகியோர் எதிர் தரப்பை சேர்ந்த இளையபெருமாள், அவரது மகன் உள்ளிட்டோர் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் விருத்தாசலம் காவல்துறையினர் இளையபெருமாள் அவரது மகனையும் விசாரணைக்காக வருமாறு காவல்துறையினர் அழைத்ததாக கூறப்படுகிறது
மேற்படி இளையபெருமாள் என் மகன் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய நிலையில் வேண்டுமென்றே அவர் மீது பொய்வழக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் மனவேதனை அடைந்த இளையபெருமாள் வயல்வெளியில் தெளிப்பதற்கு வைத்திருந்த மருந்தினை குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் அழைத்து வந்து சேர்ந்தனர். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments
Thank you for your comments