Breaking News

சசிகலா பேச்சு சலசலப்பு... 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு

சென்னை:

கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9ல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளதாகவும் சசிகலா கூறி உள்ளார். 

சசிகலாவுடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர். அதேசமயம், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9ல் நடைபெறும் என அறிவிப்பு.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9ல் நடைபெறும் என அறிவிப்பு.
56
6 Comments
6 Shares
Like
Comment
Share

No comments

Thank you for your comments