Breaking News

குத்துச்சண்டை போட்டியில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அசத்தல் வெற்றி

டோக்கியோ:

குத்துச்சண்டைபோட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தி வெற்றியை தனது வசமாக்கினார் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம்.

மேரி கோம் - டொமினிக்கன் வீராங்கனை
உலகளவில் இந்தியாவுக்காக பல பதக்கங்களைப் பெற்று தந்தவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். 

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை பிளைவெயிட் பிரிவு 2-வது சுற்று இன்று பிற்பகல் மதியம் 2.05 மணிக்கு போட்டிகள் தொங்கியது.  இதில், மேரி கோம் டொமினிக்கன் வீராங்கனை மிகெலீனா ஹெர்னாண்டஸ்  எதிர்கொண்டார்.

ஆட்டம் தொடங்கிய முதலே அவரின் வேகமும், பன்ச்சுகளும் நேர்த்தியாக இருந்தன. குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் ஆட்டத்தை அது நினைவுப்படுத்தியது. 

தன்னை எதிர்த்து ஆடிய மிகுலினா ஹர்னான்டஸை மேரி கோம் 4-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் எளிதில்  வென்றார்.

மேரி கோம்  5 ரவுண்டுகளிலும் முறையே 30-27, 28-29, 29-28, 30-27, 29-28 என புள்ளிகள் பெற்றார்.


டோக்கியோ  2020 ஒலிம்பிக் போட்டிகள் 

உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது.

கடைசியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது.இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23/07/2021  (வெள்ளிக்கிழமை) அன்று தொடங்கியது. 

கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது. கொரோனா அரக்கனின் கொடூர தாண்டவத்தால் முதல் முறையாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள்.


மீராபாய் சானு

போட்டியின் முதல் நாளான நேற்று  மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில், மீராபாய் சானு கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கினார்.

நேற்று மாலை 4.15 மணிக்கு நடந்த 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்றுலே விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

 

Arjun Lal Jat and Arvind Singh 

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார்.  

தொடர்ந்து பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சானியா மிர்சா-அங்கிதா

இதைத்தொடர்ந்து மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவினார். 

இதனிடையே,  டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றை போட்டி இன்று மதியம் 1.15 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 2 வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற புள்ளி கணக்கில் அவர் வெற்றிபெற்றார்.

மேரி கோம் - டொமினிக்கன் வீராங்கனை

 மேலும், மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தினர். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.  இதில் மேரி கோம் 4-1 என எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அவர் ஐந்து ரவுண்டுகளிலும் முறையே 30-27, 28-29, 29-28, 30-27, 29-28 என புள்ளிகள் பெற்றார்.

No comments

Thank you for your comments