Breaking News

துப்பாக்கி சுடுதல் - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம்.... இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மானு பாகெர்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்தியா சார்பில் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.

யஷாஸ்வினி ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 94, 98, 94, 97, 96, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 574-11x அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை. இதனால் யஷாஸ்வினி 13-ம் இடத்தையே பிடித்தார். 

இதேபோல், மானு பாகெர் ஒன்று முதல் ஆறு சீரிசில் 98, 95, 94, 95, 98, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 575-14x 12ம் இடம் பிடித்தார்.

முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தனர்.


ஆர்.ஓ.சி தடகள விட்டலினா பட்சராஷ்கினா பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டலை மொத்த மதிப்பெண் 240.3 என்ற புள்ளியுடன் வென்றார், இது ஒரு புதிய ஒலிம்பிக் சாதனை!

அன்டோனெட்டா கோஸ்டாடினோவா வெள்ளி பதக்கம் வென்றார்.

ஜியாங் ரான்சின் 3வது இடத்தை பிடித்தார். வெண்கலம் பதக்கம் வென்றார்.

No comments

Thank you for your comments