Breaking News

அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மூடியதால் விவசாயிகள் வேதனை

கடலூர்

சிறுபாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மூடியதால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்..

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுப்பாக்கம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

புது ஊர் அரசன்குடி நறையூர் வடபாதி உள்ளிட்ட சுமார் 15 கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் தங்கள் நெல்களை சிறுபாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துவந்தனர்.

இந்நிலையில் திடீரென ஒரு வார காலமாக நெல் கொள்முதல் நிலையத்தை மூடியதால் இங்கு விற்பனைக்கு வந்த 4 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், இங்கு ஏற்கனவே அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றுமதி செய்யாமல் வெளியில் வைக்கப்பட்டிருப்பதால் மழையில் நினைந்து சேதம் அடைந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்

No comments

Thank you for your comments