Breaking News

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகளை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு...!

வேலூர் :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இன்று (06.07.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பதிவேடுகளையும், கோப்புகளையும் ஆய்வு செய்து  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்  பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டுமனை  பட்டா உள்ளிட்ட நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து முடித்திடவும், அனைத்து அலுவலர்களையும் சீரிய முறையில் பணியாற்றுமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர் திருமதி.வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தயாளன், திருமதி.மணிமொழி, உதவி திட்ட அலுவலர் திருமதி.வளர்மதி, உதவி பொறியாளர்கள் திரு.குகன் திரு.புவியரசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பிளாஸ்டிக் கழிவுகளை பண்டல் -ஆட்சியர் ஆய்வு

இதை தொடர்ந்து, குடியாத்தம் நகராட்சியில்  உள்ள தரணம்பேட்டை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரி செய்யுமாறும்,  குப்பைகள் தரம் பிரித்து  ( BAILING MACHINE)  பிளாஸ்டிக் கழிவுகளை பண்டல் செய்யும் இடத்தை பார்வையிட்டு அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும், பயன்பாட்டில் இல்லாத கழிவறையை அகற்றுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

மேலும், குடியாத்தம் நகராட்சியில் நிலையான நீர் மேலாண்மை பாதுகாப்பு பணி மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ்  வீடுகளிலிருந்து வரும் மழைநீர் சேகரிக்கும்  ராபின்சன் குளத்தை பார்வையிட்டு, நகராட்சி ஆணையர் குடியிருப்பில் அமைந்துள்ள அங்கு நடைபெறும் குப்பை தரம் பிரித்தல் மற்றும் நுண்ணுயிர்  கூடத்தில்  (Micro Composting Centre)  உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்து இடத்தை சிறப்பாக பராமரிக்கும் தூய்மை பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் திரு.சிசில் தாமஸ், சுகாதார ஆய்வாளர் திரு.பிரபுதாஸ் மற்றும்  நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

மேலும்,  வேலூர் மாவட்டம், ஜெயராம் செட்டி தெருவில் வசித்து வரும் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் வேலூர் அவர்கள் பார்வையிட்டார். 

இம்முகாமில் சுமார் 78 அளவிலான மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.ப.முருகேசுவரி மற்றும் ஜெயன் சங்க தலைவர் திரு.ருக்ஜி கே.ராஜேஷ்  ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.


No comments

Thank you for your comments