பள்ளிகள் திறப்பது எப்போது?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
திருச்சி:
முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம்.

No comments
Thank you for your comments