அமைச்சர் சி.வெ கணேசனுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்...
கடலூர்:
சிறுப்பாக்கம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சருக்கு விவசாயிகள் இருகரம்கூப்பி நன்றி தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் பார்வையிட்டார்.
முன்னதாக சிறுப்பாக்கம் ஊராட்சியில் இருந்து பணையாந்தூர், தொழுதூர் வழியாக அரியலூர்க்கும்,லட்சுமணாபுரம் முதல் தொழுதூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும் செல்லும் அரசு பேருந்தை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
பின்னர் சிறுப்பாக்கத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையைத்தை பார்வையிட்டார் அப்போது சுற்றுப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகள் நீண்ட நாட்களாக கொள்முதல் செய்யாமல் மழையில் நனைந்து நெல் அனைத்தும் முளைத்து கிடக்கிறது என மன வேதனையோடு கூறினார்கள்.
உடனே அமைச்சர் சி.வெ.கணேசன் கடலூர் மாவட்ட வானிப நுகர்பொருள் மேற்பார்வையாளர்க்கு, தொலைபேசியில் காணொலி வாயிலாக போன் செய்து விவசாயிகள் கையில் வைத்திருந்த முளைந்த நெல்லையும், அங்கு கொள்முதல் செய்யாமல் உள்ள 5,000 நெல் மூட்டைகளையும் காண்பித்து சிறுப்பாக்கத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தை தனி கவனம் செலுத்தி அனைத்து நெல்லையும் உடனடியாக ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது அங்கு திரளாக கூடியிருந்த விவசாயிகள் அனைவரும் அமைச்சர் சி.வெ.கனேசனுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர். உடன் ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன்,அடரி சின்னசாமி,கவுண்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம், மங்களூர் ஒன்றிய இளைஞணி அமைப்பாளர் கே.என்.டி சங்கர்,மாவட்ட பிரதிநிதி மருதமுத்து,கணேசன், தினகர் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments