மாணவர்களுக்கு இலவச சிஏ பயிற்சி..!
தமிழக அரசு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பட்டயக் கணக்காளர் பயிற்சிக்கு இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி அறிவித்துள்ளார்.
இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பால் நடத்தப்படும் Chartered Accountancy - CA படிப்பிற்க்கான பயிற்சி வகுப்புகள் அதன் கீழ் இயங்கும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் (SIRC) நிறுவனம் சார்பில் CA (சிஏ) பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர்.
CA படிப்பின் முதல் நிலை தேர்வு December 2021 (Foundation Course) க்கு online மூலமாக பயிற்சி வகுப்புகள் (Coaching Class) இன்று (15.07.2021 ) முதல் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிஏ தேர்வுக்கு தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிஏ படிப்பின் முதல் நிலை தேர்வு (December 2021 - Foundation Course) க்கு online மூலமாக பயிற்சி வகுப்புகள் (Coaching Class) 15.07.2021 அன்று முதல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பட்டய கணக்காளர் பயிற்சி (சிஏ) இணையவழியில் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளும் கட்டணமின்றி இலவசமாக பயிற்சி பெறலாம்.
விருப்பமுள்ளவர்கள் https://www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 7358506400, 8220522669, 9677126011 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments
Thank you for your comments