காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமம் காட்டு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆலங்குளம் வட்டவழங்கல் அலுவலருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் ஜெஸ்லெட் ஜெயா மற்றும் குடிமை பொருள் வருவாய் ஆய்வாளர் பேச்சி ஆகியோர் ஆண்டிப்பட்டி காட்டு பகுதியில் சோதனை செய்தனர்.
சோதனையில் தார்பாய் மூலம் மூடப்பட்ட 2 லட்சம் மதிப்புள்ள சுமார் 140 மூடை ரேஷன் அரிசி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பதுக்கப்பட்ட 6 டன் அரிசியை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் ஆலங்குளத்தில் உள்ள அரசு தானிய கிட்டங்கிற்கு அனுப்பி வைத்தார். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ள கும்பல் குறித்தும் விசாரனை நடத்தி வருகின்றனர்.


No comments
Thank you for your comments