விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்..!
விருத்தாச்சலம்:
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்பு அதிகாரிகள் அதிரடியாக அகற்றம் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற காசியை விட வீசம் கூட திருத்தலம் ஆகும் இத்திருத்தலத்தின் முன்பு உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து 30க்கும் மேற்பட்டோர் கடைகள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருக்கோவிலின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட துணை ஆணையர் பரணிதரன், விருத்தாசலம் சார் ஆட்சியர், விருத்தாசலம் வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 100-க்கு மேற்பட்ட காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கன், உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முருகன், விஜயரங்கன் உள்ளிட்ட காவல் துறை பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 20 கடைகளை அகற்றினர்.
மேலும் எட்டுக்கும் மேற்பட்ட கடைகள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த கடைகளை மட்டும் ஒதுக்கி விட்டு மீதம் உள்ள கடைகளை அகற்றினர்
அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், கால அவகாசம் கேட்டும், கிடைக்காத நிலையில் அதிரடியாக அனைத்து கடைகளையும் அகற்றினர் இச்சம்பவத்தால் விருத்தாச்சலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
முக்கியச் செய்தி படிக்க 👀 சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி நீட் தேர்வு விலக்கு பெற முடிவு?
No comments
Thank you for your comments