ஐடிஐ - அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்...
வேலூர்:
வேலூர், அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழற்கல்வி பயிற்சியில் சேர்ந்து பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் FITTER, ELECTRICIAN, TURNER, MACHINIST, MECHANIC MOTOR VEHICLE, DRAUGHTSMAN CIVIL ஆகிய தொழிற்பிரிவுகளிலும்,
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் WIREMAN, WELDER, SHEET METAL WORKER, CARPENTER, LEATHER GOODS MAKER, FOOTWEAR MAKER,
ஆகிய தொழிற்பிரிகளில் சேர 04.08.2021ம் தேதிக்கும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750/- உதவிதொகை, லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகம், சீருடை, காலணி வழங்குவதுடன், பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு 0416-2290848 தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அசல் கல்வி சான்றுகளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244 மற்றும் உதவி இயக்குநர், மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம், ஈரோடு 0424-2270044 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
8-ஆம் வகுப்பு / 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு 10 -ஆம் வகுப்பு முடித்தவர் எனில் 9-ஆம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ்),
மாற்றுசான்றிதழ்,
சாதிசான்றிதழ்,
ஆதார் அட்டை,
Passport Size Photo
மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்துவரவும். இந்த நல்லவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு ஈரோடு மாவட்டஆட்சியர் ஹச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Click 👉 www.skilltraining.tn.gov.in
No comments
Thank you for your comments