காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் ஆதரவற்றோருக்கு அரிசி மளிகை பொருட்கள், முக கவசங்கள் வழங்கல்
காட்பாடி:
இந்தியன் ரெடகிராஸ் சங்க காட்பாடி வட்டகிளை சார்பில் கொரோனா வைரஸ் இரண்டா
வது அலை பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள காட்பாடி வட்டம் வள்ளிமலை சாலை அருகில் உள்ள முதியோர் ஆதரவற்றோர், பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் காய்கறிகள் மேலும் முக கவசங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் பேராசிரியர் எல்.பிரதாபன் அவைத்துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இளங்கோ, மற்றும் கணேசன், சமூக ஆர்வலர் சின்னதுரை ஆகியோர் பங்கேற்று முதியோர் ஆதரவற்றோர், பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் காய்கறிகள் மேலும் முக கவசங்களும் வழங்கினர்.
செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர் டாக்டர் வி.தீனபந்து, ஆர்.கே.அறக்கட்டளையின் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் எ.ஸ்ரீதரன், வி.காந்திலால், வாழ்நாள் உறுப்பினர் எ.ஆனந்தகுமார், தன்னார்வ தொண்டர் செ.ஜ.சோமசுந்தரம் மோதகப்பிரியன் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
நிவாரன பொருட்கள் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி வகைகள், ரெட்கிராஸ் துணி முககவசம் ஆகியன 25 குடும்பத்தினருக்கு ரூபாய் 15ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கினர். முடிவில் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு நன்றி கூறினார்.

No comments
Thank you for your comments