Breaking News

உழவர் சந்தைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர்:

வேலூர் மாவட்டம் டோல்கேட் மற்றும் காட்பாடி பகுதியில்  அமைந்துள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்யும் உழவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் 20-07-2021 அன்று பார்வையிட்டு, காய்கனிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் மொத்தம் 138 கடைகள் உள்ளன. அதில் 145 விவசாயிகள் சில்லரை வணிகம் செய்து வருகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் கிலோ காய்கனி மற்றும்  கீரை வகைகள் விற்பனையாகின்றன. இந்த உழவர் சந்தையை  20&07&2021 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விற்பனை செய்யும் உழவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகள் மற்றும் காய்கனிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஒரு மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஒரு கடையை ஒதுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

வேலூர் மாவட்டம் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சரியான முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளும்  பயன்பெறும் வகையில் பேருந்து வசதிகளை அதிகபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பாட்டு வசதிகள் செய்வது தொடர்பாக சில திருத்தங்களை தெரிவித்து, அவற்றை 10 நாட்களில் செய்து முடிக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

மேலும், உழவர் சந்தையில் வாகனம் நிறுத்தம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து  உழவர் சந்தையை விரிவுப்படுத்த அனைத்து அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த உழவர் சந்தையில் காவல்துறையின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு வாகனம் திருடப்படும் சம்பவம் நடைபெறாத வகையில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள உழவர் சந்தையில் உள்ள 73 கடைகளை பார்வையிட்டு அதில்  சில்லரை வணிகம் செய்து வருகின்ற 84 விவசாயிகளின் கடைகள் சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, உழவர் சந்தையில் காய்கனிகள் மற்றும்  கீரை வகைகள் விற்பனையை பார்வையிட்டு கீரை கட்டுகளை விலை கொடுத்து வாங்கினார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் திரு.ந.சங்கரன், வேளாண் அலுவலர் திரு.டேவிட் ராஜ்குமார், தோட்டக்கலை உதவி இயக்குநர் திருமதி.நித்யா, நிர்வாக அலுவலர்கள் திருமதி.வீணபிரியா, திரு.லோகபிரியன் மற்றும் அலுவலர்கள் உடன் உள்ளனர்.

No comments

Thank you for your comments