Breaking News

2வது நாளாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி...!

புதுடெல்லி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கிய போது எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.  இன்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை மறுநாள் காலை 11:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

ஜூலை மாதம் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணிக்கு மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளாக மக்களவையும் மாநிலங்களவையும் துவங்கின. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவை தலைமை பொறுப்பில் இருந்தார்.

துவங்கிய பொழுது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்ப தொடங்கினார்கள். அவர்கள் கோஷங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் கையில் தாங்கிக் கொண்டு அணிவகுத்தனர்.

அவையில் கேள்வி நேரம் துவங்குவதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

மக்களவை உறுப்பினர் ஜஸ் கவுர் மீனா கேள்வி ஒன்றை எழுப்பினார்.

விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பில் எத்தனை விவசாயிகள் வேண்டுமானாலும் அனுமதிக்கப்படுவார்கள் ஆண் பெண் விவசாயிகள் என்ற வேறுபாடு பார்க்க படுமா ஒவ்வொரு விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிலும் எத்தனை பேர் சேரலாம் என்ற கட்டுப்பாடு உண்டா என்று மீனா கேட்டார்.

மீனாவின் கேள்விக்கு வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுதாரி பதில் அளித்தார், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பில் எண்ணிக்கை அடிப்படையிலான கட்டுப்பாடு எதுவும் கிடையாது ஆண்-பெண் விவசாயிகள் என்ற பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை கூடுதலான எண்ணிக்கையில் விவசாயிகள் சேர்ந்தால் அந்த விவசாயிகள் உற்பத்தி அமைப்பின் இலாபம் அதிகரிக்கும் என்று அமைச்சர் கைலாஷ் பதிலளித்தார்.

இந்த சமயத்தில் அவையில் உரத்தகுரலில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்காரணமாக மக்களவையை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.  

மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு துவங்கும் பொழுது அவை தலைமைப் பொறுப்பில் குடியரசு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இருந்தார்.

அவை முன்னால் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்காக வழக்கமான நடவடிக்கைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி விதி 267 பல உறுப்பினர்கள் அறிவிப்பு தந்திருக்கிறார்கள்.

அதனால் விதி 267 இன்று அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க அவைத்தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று ஆனந்த சர்மா கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் 15 அல்லது 16 நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறார்கள் இந்த நோட்டீஸ்களில் எந்த நோட்டீசை தான் எடுத்துக்கொள்ள முடியும் அதற்கு என்ன அடிப்படை என்று அவைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு எதிர்க்கேள்வி எழுப்பினார் .

இந்த பிரச்சனை குறித்து நீங்கள் அவையில் பேச வேண்டும் என்று விரும்பினால் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசலாம் அதற்கு நான் அனுமதி தருகிறேன் என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

தலைவரின் பதிலை கேட்ட காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா விதி 267 அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து முக்கிய பிரச்சினைகளை பேச நீங்கள் அனுமதி வழங்காவிட்டால் அவங்களே அந்த விதியின் கீழ் அனுமதியை எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அவையில் கோஷங்கள் உரத்தகுரலில்  எழுந்தன அதனால் துவங்கிய சில நிமிட நேரத்தில் மக்களவையை போல மாநிலங்களவையில் ஒத்திவைக்கப்பட்டது மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக 2-வது நாளாக இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments

Thank you for your comments