Breaking News

நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் கோர விபத்து... கவலைகிடம்? - உடன் சென்ற தோழி உயிரிழப்பு...!

சென்னை: 

பிரபல தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  படுகாயமடைந்த நிலையில் தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவில் தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், அவர் சென்ற கார் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதாகவும் தெரிகிறது.


இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் இரண்டு  நண்பர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இவர் யாஷிகாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

தற்போது யாஷிகாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த யாஷிகாவின் தந்தை,  நான் தற்போது டெல்லியில் இருக்கிறேன் என்றும் சென்னைக்கு விரைந்து கொண்டிருக்கிறேன் என்றும் மருத்துவமனையில் யாஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறியபோது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்கள் என்றும் கூறியுள்ளார்.

யாஷிகா ஆனந்த் சென்ற கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெரும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காவல்துறையினர் வழக்குப் பதிவு

படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கட்டுப்பாட்டை இழந்ததால் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

இதையடுத்து நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


No comments

Thank you for your comments