Breaking News

புதுமையான முயற்சியில் தமிழக அரசு..!

சென்னை: 

தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை ஆராய்ந்து வருகிறது தமிழக சுற்றுலா துறை. அதில் ஒன்றாக தமிழகத்தில் கேரவன் டூரிஸத்தை அறிமுகப்படுத்த தமிழக சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. 



கேரவன் டூரிஸம் என்பது கடல், மலை, காடு, என இயற்கையோடு ஒன்றிணைந்து தங்க விரும்பும் சுற்றுலாபயணிகளுக்காக கட்டில் மெத்தை, சமையலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வாகனமாகும்.

இந்த கேரவன் டூரிஸம் முறை பொதுவாக வெளிநாடுகளில் தான் அதிகம் உள்ளது. இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.  இப்போது இதனை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை புதிய இலக்கை அடையும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.. 

இதேபோல் மிக நீன்ட கடல் பரப்பை கொண்ட சென்னையில் நீர் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட இன்னும் சில திட்டங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது. அதேபோல் சென்னை தீவுத்திடல் ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் பொருட்காட்சி, கண்காட்சி அரங்கம், வர்த்தக மேளா, என தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதோடு நீலகிரி, கொடைக்கானல், ராமேஸ்வரம், உள்ளிட்ட இன்னும் சில சுற்றுலா தலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தனது அமைச்சரவையில் உள்ள எந்தவொரு அமைச்சரும் சும்மா இருந்துவிடக்கூடாது என நினைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துறைவாரியாக அவர்கள் துறையின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார். 

அந்த வகையில் சுற்றுலாதுறை தானே என்று அஜாக்கிரதையாக இல்லாமல் அந்த துறையின் அமைச்சர் மதிவேந்தனின் செயல்பாடுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனிக்கத் தவறவில்லை. 

சர்வதேச அரங்கில் தமிழக சுற்றுலாத்துறை தனித்து தெரிய வேண்டும் என விரும்பும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கேற்ற ஆலோசனைகளை அந்த துறையின் ஆய்வுக்கூட்டத்தில் கூறவிருக்கிறார்.


 

No comments

Thank you for your comments