வெள்ளை யானை தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி-யோகிபாபு கூட்டணி ....!
சென்னை:
சமீபத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு கூட்டணி நடிப்பில் "வெள்ளை யானை" என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ என்ற திரைப்படத்தில், யோகிபாபுவும், சமுத்திரக்கனியும் மீண்டும் கூட்டணி சேர உள்ளனர்.
சமுத்திரக்கனி உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்த ’தலைவி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘டான்’, ’ரைட்டர்’ பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
சமீபத்தில் தான் இவரது நடிப்பில் "வெள்ளை யானை" என்ற திரைப்படம் வெளியானது. இன்னும் பல படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
என்.ஏ. இராசேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தேசிய விருது பெற்ற என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தில் ஈழக்கவிஞர் தீபச்செல்வன் முக்கிய பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார். படத்தில் மேலும் ஆதிரை, பொன்முத்துவேல் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்
பார்டர், பாரிஸ் ஜெயராஜ், வால்டர் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் பிரபுதிலக் மற்றும் சி. ஆனந்த் ஜோசப்ராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்தத்திரைப்படத்தின் தயாரிப்புபணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வெகுவிரைவில் திரையில் வெளியாகவுள்ளது.


No comments
Thank you for your comments