மின் விநியோக நிறுத்தம்
திருவள்ளுர், ஜூலை 29-
திருவள்ளுர் கோட்டம், காக்களுர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் மாதாந்திர அத்தியாவசிய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவிருப்பதால் 31.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை காக்களுர், நரசிங்கபுரம், திருவள்ளுர், மோதிலால் தெரு, பூங்காநகர், வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களுர் ஹவுசிங்போர்டு, சி.வி.நாயுடு சாலை, எடைப்பாளையம், பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர். பின்புரம், காக்களுர் தொழிற்பேட்டை, பூண்டி, புல்லரம்பாக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதே போன்று திருவள்ளுர் கோட்டத்தைச் சார்ந்த 110 கிலோ வோல்ட் பெரியபாளையம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர அத்தியாவசிய மின்சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் 03.08.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பெரியபாளையம், பண்டிக்காவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைபேர், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளத்தூர் மற்றும்; அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

No comments
Thank you for your comments