ஐடிஐ தொழிற் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் அறிவிப்பு - தேதி 12.08.2021
ஈரோடு:
ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் உதவித் தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதற்கான நேர்காணல் எதிர்வரும் 12.08.2021 அன்று ஈரோடு மின்பகிர்மான வட்டம் அலுவலகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை வளாகத்திற்குள் நடைபெற உள்ளது என்று ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பொறி.கே.இந்திராணி தகவல் தெரிவித்துள்ளார்.
ஐடிஐ தொழிற் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் அறிவிப்பு
ஐடிஐ யில் பயின்று Electrician/ Wireman / Draftsman Civil / Computer Operator / Instrument Mechanic / Surveyor பிரிவில் NTC சான்று பெற்றுள்ள ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்களில் மொத்தம் 60 நபர்களுக்கு ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் பிரதி மாதம் ரூ.7,709/- உதவித் தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு தொழிற் பழகுநர் பயிற்சி (Apprenticeship Training) அளிக்கப்படவுள்ளது. அதற்கான நேர்காணல் எதிர்வரும் 12.08.2021-ம் தேதியில் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை ஈரோடு மின்பகிர்மான வட்டம் அலுவலகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.
தகுதியுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும்பொது NTC ITI மதிப்பெண் சான்றிதழ் SSLC மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், அசல் மற்றும் இரண்டு சான்றொப்பமிடப்பட்ட நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ். போட்டோவுடன் மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே தொழிற் பழகுநர் பயிற்சி நிறைவு செய்தவர்கள் மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ளுதல் கூடாது.
நேர்காணலில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. மேலும், தொழிற்பழகுநர் பயிற்சி நிரந்தர வேலைக்கு உத்தரவாதமற்றது ஆகும் என ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பொறி. கே.இந்திராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments