மான் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மான்கள் வசித்து வருகின்றது. இந்த ராமர் கோவில் மலை வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இங்குள்ள மான்கள் தண்ணீர் குடிக்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இரை தேடியும், தண்ணீருக்காகவும் வனத்தை ஒட்டி உள்ள வயல் பகுதிக்கு மான்கள் வருவதுண்டு. எனவே வயலில் உள்ள பயிர்களை பாதுகாக்க மின் வேலியை விவசாயிகள் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு மேல் 10 க்கும் மேற்பட்ட கும்பல் மான் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வேட்டையாட மானை துரத்தி சென்றபோது பால்ராஜ் என்பவருடைய வயல் மின் வேலியில் சிக்கி, கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி முத்து மகன் வள்ளிகுமார் (28) பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்டையாட உடன் வந்தவர்களை குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.


No comments
Thank you for your comments