8 மாநில ஆளுநர்கள் நியமனம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு
புதுடெல்லி:
4 மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு ஆளுநராக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருக்கின்ற நிலையில் பல மாநிலங்களில் திடீரென ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 8 மாநிலங்களில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 4 மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு ஆளுநராக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.
ஆளுநர்கள் இடமாற்றம்:
1. மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. அரியானா ஆளுநராக இருந்த சத்யதேவ்நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. திரிபுரா ஆளுநராக உள்ள ரமேஷ் பயாஸ், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. இமாச்சலபிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, அரியானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஆளநர்கள் நியமனம்:
5. கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக மத்திய அமைச்சர் தாவர்ச்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பாம்பதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. மத்தியபிரதேச ஆளுநராக மங்குபாய் ஜகன்பாய் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. இமாச்சலபிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments
Thank you for your comments