Breaking News

மங்களூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற அளவீடு பணி...

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் ஊராட்சியில் இருந்து மலையனூர் செல்லும் சாலை, பெருமாள் கோயில் தெருக்கள் மற்றும் மாங்குளம் செல்லும் சாலை பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் பயன் பெறும் வகையில் குடி பைப்லைன் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைப்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து அகற்றுவதற்கு வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி பிறப்பித்துள்ள ஆணையின் பேரில்.

மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி  முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவர் ராமு தலைமையில்  தெருக்கள் மற்றும்சாலைகள் அளவீடு செய்யும் பணி  நடைபெற்றது.

இதில் சர்வேயர்கள் சிவக்குமார்  ராகுல், வருவாய் ஆய்வாளர் பழனி, கவுண்சிலர் மல்லிகா பொன்முடி, விஏஒ சின்னராஜா, கிராம உதவியாளர் முருகன், செயலர் சேகர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments