Breaking News

விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்

வேலூர்:

தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.  தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக வேளாண்மைப் பொறியியல்  துறை பல்வேறு புதிய,  நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி  விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது. பெற்று பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்தகாலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கிவருகிறது.

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான மண்தள்ளும் இயந்திரம் 1 எண், டிராக்டர் 3 எண்கள், டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் 1 எண் மற்றும் டயர் வகை மண் அள்ளும் இயந்திரம் 1 எண் இருப்பில் உள்ளன.

மேற்படி, டிராக்டரால் இயக்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340/- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.



மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், டிராக் வகைமண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.1,440/-க்கும்,  டயர் வகைமண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.660/-க்கும் மற்றும் நிலம் சமன் செய்வதற்குமண்தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.840/-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

எனவே, மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தினை அனுகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

உதவி செயற்பொறியாளர்(வே.பொ),

தந்தைபெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில், 

தொரப்பாடி, வேலூர்-2

உதவிசெயற் பொறியாளர் (வேபொ) வேலூர் அவர்களின்  தொலைபேசிஎண்: 0416 - 2907182

உதவிப்பொறியாளர்(வேபொ) வேலூர்:9487105115

இளநிலை பொறியாளர்(வேபொ) பேர்ணாம்பட்டு: 9894413644

உதவிப் பொறியாளர் (வேபொ) குடியாத்தம்:9444870289

உதவிப்பொறியாளர்(வேபொ) காட்பாடி:9443006742

செயற் பொறியாளர்(வேபொ) வேலூர் அவர்களின் தொலைபேசிஎண்:0416-2266603

எனமாவட்டஆட்சித்தலைவர்திரு.பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.







No comments

Thank you for your comments