Breaking News

இலவச வீட்டு மனை வழங்குவதை நிறுத்தக் கோரி மனு !


திட்டக்குடி:

இலவச வீட்டு மனை வழங்குவதை நிறுத்தக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மங்களூர் ஒன்றிய பொருளாளர் தொழுதூர் இரா.ரமேஷ் தலைமையில் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா மருதத்தூர் கிராமத்தை சேர்ந்த ரசி என்பவரின் பாட்டனார் இறந்த தங்கவேலு அவரது வாரிசுதாரர்கள் சுப்பிரமணியன் சங்கரன் அவர்களுக்கு வாரிசுதாரர்கள் ரசி ,ஜெயந்தி ,சுகந்தி,அஞ்சலிதேவி,ஆனந்தசெல்வன்  உள்ளிட்ட  ஐந்து பேர்கள் வாரிசுகளாக உள்ள நிலையில் எனது தாயார் தனமணி மருதத்தூரில் அபு சர்வே எண் 45/4, 47/1, 2, 3, 4, 5, 6, 7, என்ற எண்களில் உள்ள சுமார் 92 1/2 சென்ட் நிலத்தினை கடந்த 1982ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி வீரமுத்து மகன் கருப்புசாமி என்பவருடன் கிரையம் பெற்ற சொத்தாகும். 

மேற்படி சொத்தினை விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு குடியிருப்பு மனைகள் எடுக்கும்போது  நான் மேஜர் மற்றும் எனது சகோதரிகள் மைனர் ஆவார்கள்.

இந்நிலையில் 29-04-1999 தேதி எழுதிவாங்கிய பத்திரத்தில் எங்களை அடையாளம் காட்டாமல்  தங்கள் வீட்டு குடியிருப்பு மனை அமையும் வகையில் நானும் என் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனைவரும் வாரிசுதாரர்கள்.

மேற்கூறிய சொத்துகளுக்கு வாரிசு தாரர்கள் என்ற முறையில் வாழ உரிமை உண்டு மேலும் எழுத படிக்க தெரியாத எனது பெற்றோர்களை அரசுஅதிகாரிகள் மூளைச்சலவை செய்து குறைந்த விலையில் வாங்கியநிலையில் ,  மேலும் தங்கள்  எனது குடும்பத்திற்கு குடியிருப்பு வீட்டுமனை 2-பிளாட் தருவதாக சொல்லி ஏமாற்றி வாங்கிவிட்டு 1 பிளாட் மட்டும் எனது தாயார் பெயர்க்கு பட்டா வழங்கப்பட்டது.

மேற்படி அந்த பட்டாவையே வேறொரு நபர்க்கு வழங்கி எங்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார்கள் மேற்படி எழுதபடிக்க தெரியாத எங்களுக்கு  எங்களிடம்ஏமாற்றி  வாங்கிய இடத்தினை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டுமென விருத்தாசலம் சலம் சார் ஆட்சியர் மற்றும் விருத்தாசலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வட்டாட்சியரிடம் விசிக மங்களூர் ஒன்றிய பொருளாளர் தொழுதூர் இரா.ரமேஷ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments