Breaking News

கடலூர் ஆற்றங்கரை நகரில் மாலை நேர பாடசாலை... இளைஞர்கள் நோட்டு பேனா வழங்கல்

கடலூர்:

கொரோனா நோய் தொற்று மிக அதிகமாக பரவிய நிலையில் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. 

இச்சூழ்நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு கடலூர் 39-வது வார்டு ஆற்றங்கரை நகரில் அப்பகுதியில் இளைஞர்களின் ஒத்துழைப்பில் மாலை நேர பாடசாலை 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து துவக்கப்பட்டது.


இதில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் நோட்டு, புத்தகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பிஸ்கட் உணவுகள் வழங்கப்பட்டது. இதனை கடலூர் திமுக மாணவரணி அமைப்பாளர் எஸ்.பி.நடராஜன் தனது சொந்த செலவில் வழங்கினார்.


உடன் 44-வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் பார்த்திபன், இளைஞர்கள் பாரதி, பாபு, சதீஷ், நிர்மல், ராம்குமார், பரத் உடனிருந்தனர் முடிவில் மாலை நேர பாடசாலை ஆசிரியர் நாகரத்தினம் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments