தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை... முதல் கணவர் வெறி செயல்...
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் கணேசன் மகன் பொன்ராஜ். விவசாயியான இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் வி.கேபுரம் டாணாவை சேர்ந்த வெள்ளசாமி மகள் மகாலக்ஷ்மி என்பவருக்கும் இரண்டு மாதங்கள் முன்பு திருமணம் ஆனது.
ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்த ஒரு மாதத்தில் கண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகாலக்ஷ்மி தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 2 மாதம் முன்பு தான் பொன்ராஜூடன் இரண்டாவதாக திருமணம் நடந்தது.
இந்நிலையில் இன்று 22-7-21 காலை 9 மணிக்கு கல்லூத்து வந்த முதல் கணவன் கண்ணன் அந்த ஊரில் உள்ளவர்களிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என கூறி மகாலக்ஷ்மி வீட்டை அடையாளம் கேட்டு தேடி வந்துள்ளார். வீட்டை அடையாளம் கண்டு கொண்ட கண்ணன் பைக்கில் இருந்த அரிவாளை எடுத்து வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த மகாலக்ஷ்மியை சராமரியாக கை மற்றும் தலை கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
மகாலக்ஷ்மியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த பொன்ராஜ் மற்றும் கணேசன் விரைந்து ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு மகாலக்ஷ்மி இறந்து கிடந்தார்.
இது குறித்து வீ.கே புதூர் போலீசிற்கு தகவல் அளிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பக்டர் சுரேஷ் உடலை கைபற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னி வளவன் தலைமையிலான போலீசார் கொலை செய்து தப்பி ஓடிய கண்ணனை நெல்லை மாவட்டம் அம்பை அருகே கைது செய்தனர்.
தன்னுடன் வாழாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.இது குறித்து வி.கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட கண்ணனிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.


No comments
Thank you for your comments