பாழடைந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்... பொதுமக்கள் தொடர்ந்து அவதி....
திட்டக்குடி:
ஆவட்டியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவட்டியில் 15 கிராமங்களை உள்ளடக்கி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் சுமார் 10 வருடங்களாக அந்த அலுவலகம் பயன்படுத்தாமல் பாழடைந்த நிலையில் உள்ளது.
இதனை காரணம் காட்டி அதிகாரிகள் அவர்களின் வசதிக்காக தொழுதூர் ராமநத்தத்தில் தனியார் கட்டடத்தில் தற்காலிக அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்
இதனால் ஆவட்டி சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் ஆவட்டியில் உள்ள பொதுச்சேவை கட்டிடம் மற்றும் பயன்படுத்தாமல் உள்ள அரசு கட்டிடங்களில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments
Thank you for your comments