Breaking News

ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் அண்ணபூரணி சண்முகம்,அமைப்பு செயலாளர்  துர்காதேவி ஆறுமுகம் தலைமை தாங்கினர். துணைதலைவர் செல்வராசு,பொருளாலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணைதலைவர்களுக்கு வழங்கப்பட்ட டிஎஸ்கி தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வருடா வருடம் வரவு செலவு கணக்குகளை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விளம்பரம் ஒட்ட வேண்டும், பஞ்சாயத்திற்கு வாங்கப்படும் பொருட்கள் வாங்கும்போது துணை தலைவர்கள் அனுமதிக்க வேண்டும், தலைவர் மற்றும் செயலர் சேர்ந்து எலக்ட்ரிக் பில் தயார் செய்வதை தடுக்க வேண்டும், துணைத் தலைவர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும், 100 நாள் பணி அட்டை ஊராட்சி மன்றதலைவர்கள் இலவசமாக வழங்க வேண்டும், தலைவர் மற்றும் செயலர்களுக்கு பிடிஒ அலுவலகம் மூலம் அனுப்பபடும் குறுஞ்செய்தி துணைத் தலைவர்களுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பின்னர் தீர்மான நகலை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் அர்களிடம்  துணைத் தலைவர்கள் வழங்கினர்.

இதில் செயலாளர் மணிகண்டன், ஆலோசகர் தேன்மொழி, ஜெகஜீவானந்தம், மஞ்சுளா, சுப்ரமணியன், மலர்கொடி, சின்னையன், தனலெட்சுமி, பிரேம்குமார், தமிழ் அழகி, வசந்தா, பூவரசி, வசந்தா, தனுஷ்கோடி, சங்கர், சம்பத், ராசாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments