Breaking News

விசிக தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு களைகட்டும் பிரமாண்ட சுவர் விளம்பரம்...!

கடலூர்:

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்விழா முன்னிட்டு பிரமாண்ட சுவர் விளம்பரத்தை விசிக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எழுத்தூர் கோபால் எழுதியுள்ளார். இதனை கண்ட அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா முன்னிட்டு  கடலூர் மேற்கு மாவட்டம், திட்டக்குடி வட்டம், தொழுதூர்- ராமநத்தம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மற்றும் ஆத்தூர் விருத்தாச்சலம், இணைப்பு சாலை மேம்பாலத்தில் உள்ள பக்கவாட்டு சுவர்களில் ,  பாலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இருபுறங்களிலும் மிகவும் பிரம்மாண்டமான முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எழுத்தூர் கோபால் என்பவர் சுமார் 40 ஆயிரம் செலவில் எழுதியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா முன்னிட்டு வரையப்பட்டுள்ள பிரமாண்ட சுவர் விளம்பரத்தை, அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளரும் மாவட்ட செயலாளருமான   வீரமணி ஆசிரியர், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் திட்டக்குடி வட்டத் தலைவர் அர்ஜுனன்,  மங்களூர் மேற்கு ஒன்றிய பொருளாளர் ரமேஷ், தச்சூர்  ரமேஷ் என்கின்ற பகலவன்,  ஒரங்கூர் பெருவழுதி, தொழுதூர் பாலு, பாண்டியன், மற்றும் அன்புச்செல்வன் நாவலூர் முகாம் நிர்வாகி சிவகுமார் , ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அப்போது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன்  பிறந்தநாள் விழாவை  முன்னிட்டு, கோலாகலமாக  கொண்டாட திட்டமிட்டு உள்ளதாகவும், கடலூர் மேற்கு மாவட்ட பகுதியில் அனைத்து கிராமப்புறங்களிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments