அரசு அலட்சயத்தால் கொத்தடிமைகளாக வாழும் பளியர் இன ஆதிவாசி மலைவாழ் மக்கள்..!
திண்டுக்கல்:
அரசு அலட்சியப்போக்கால் சாதி சான்றிதழ் கிடைக்காமல், பட்டா கிடைக்காமல் கொத்தடிமைகளாக இருப்பதாக பளியர் இன ஆதிவாசி மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சாதி சான்றிதழ் பெற முடியாததால் எட்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளி பயில முடியாமல் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் அவலை நிலை ஏற்படுகின்றது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆடலூர் ஊராட்சி கிராம பகுதியான குளவிகரை, துவரம்கொம்பு, குறவனாட்சி ஓடை ஆகிய பகுதிகளிலும் மற்றும் கடைசிக்காடு கடுகுதேடி என சுற்றுப்பகுதி மலை கிராமத்தில் பளியர் இன ஆதிவாசி மக்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்
இவர்களில் பல குடும்பத்தில் வசிப்பவர்களுக்கு ஜாதி சான்றிதழ் தற்போது வரை பெற முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்தனர்கள்.
இதனால் பள்ளி பயிலும் மாணவ மாணவிகள் எட்டாம் வகுப்பிற்கு மேல் செல்ல முடியாமல் வீட்டோடு இருந்து வருவதாகவும், எட்டாம் வகுப்பிற்கு மேல் மேற்படிப்புக்கு செல்ல முடியாத காரணத்தினால் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்
மேலும் குடியிருப்புகளுக்கு பட்டா வசதிகள் இல்லாததால் தனிநபர்களுக்கு சொந்தமான எஸ்டேட்களில் தினக்கூலியாக பணி செய்து வருகிறார்கள்.
தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் இவர்கள் குடி இருப்பதற்காக வீடுகள் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர்கள்
இங்கு குடியிக்கும் காரணத்தினால் ஆண்களுக்கு 300 ரூபாயும் பெண்களுக்கு 200 ரூபாயும் குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
தாங்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதற்கு சாதி சான்றிதழ் கிடைக்காமலும் பட்டா கிடைக்காமலும் அரசு அலட்சியப்போக்காக இருப்பதே காரணம் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள்.
சாதி சான்றிதழ்கள் மற்றும் குடியிருப்பு பட்டா வழங்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றும் கூட தற்போது வரை எந்தவித நடவடிக்கை இல்லாமல் இருந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்கள்
இந்நிலை இருந்தும் கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டு இவர்களுக்கு சாதி சான்றிதழ்கள் மற்றும் பட்டா தருவதாக தெரிவித்ததாக கூறிய நிலையில் கஜா புயல் காரணமாக சான்றிதழ்கள் கொடுக்கும் பணி தொய்வு ஏற்பட்டது என தெரிவித்தார்கள்
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் பளியர் இன ஆதிவாசி மக்களின் குழந்தைகளின் நலன் கருதியும் கொத்தடிமை வாழ்க்கையை மீட்டுத் தரவும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்
🔊காலச்சக்கரம் நாளிதழ் செய்திக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்


No comments
Thank you for your comments