உதயநிதி ஸ்டாலினுக்கு விசிக சார்பில் வெண்கல சிலை வழங்கல்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நேற்று முதல் நாள் வருகை தந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமனியன்,வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் திட்டக்குடி தொகுதி செயலாளர் ராஜா. அலெக்சாண்டர் தலைமையில் கோகுலகண்ணன் யசோதா வெண்கல சிலை வழங்கப்பட்டது.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, நகர இளைஞரணி செயலாளர் சேதுராமன், விசிக மங்களூர் ஒன்றிய பொருளாளர் தொழுதூர் இரா.ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் பிரகாஷ், பழனிமுத்து திருமேனி, டைகர் சிவா, திருமா காசி, திருவெச்செல்வன் காசி பழனிராசா, வெங்கடேசன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

No comments
Thank you for your comments