உங்கள் ரேஷன் கார்டில் இந்த குறியீடுகள்உள்ளாதா...? குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும்...!
சென்னை:
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம் எப்போதும் அமல்படுத்தப்பட்டால் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் இப்போதைய தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு என்றார்,
மேலும் "ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில்" தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவை ஆகும்.
அந்த உறுதிமொழியில், "அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் அமைப்போம்" என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
முதலமைச்சர் அறித்த பல திட்டங்களையும் பதவி ஏற்ற நாள் முதல் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
திமுக தேர்தல் வாக்குறுதியான கொரோனா நிதி ரூ.4000ம் வழங்கி குடும்ப தலைவிகளையும் மகிழ்ச்சி படுத்தியுள்ளது திமுக அரசு.
அடுத்தது மாதாமாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டத்தை தொடங்குவது குறித்து திமுக அரசு ஆலோசனை நடத்தியது.
தற்போது தமிழக குடும்ப தலைவிகளும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகைக்கான அரசானையை ஆவலோடு எதிர்ப்பார்த்துள்ளனர். மேலும், அது நமக்க கிடைக்குமா என்ற சந்தேக குழப்பங்களுடன் உள்ளனர்.
இதற்கிடையில், குடும்பத் தலைவியின் பெயர் ரேஷன் அட்டையில் இருந்தால் மட்டுமே ரூ 1000 கிடைக்கும் என புதிய தகவல் பரவியதால் குழப்பம் நிலவி வருகிறது.
பலர் குடும்பத் தலைவர் பெயர் உள்ள கார்டுகளை குடும்பத் தலைவி பெயரை மாற்ற ஏராளமான விண்ணப்பங்கள் உணவுப் பொருள் விநியோகத் துறைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இதுவரை ரேஷன் கார்டே இல்லாதவர்கள் கூட ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்து வருகிறார்கள்.
ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவி இருந்தால் மட்டும்தான் இந்த 1000 ரூபாய் கிடைக்குமா, இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் உபயோகத்தில் இருக்கும் ஸ்மார்ட் கார்டுகளில்
PHH - Priority House Hold
PHH-AAY - Antyodaya Anna Yojana
NPHH - Non-Priority HouseHold
NPHH-S - Sugar
NPHH-NC - No Commodity
என 5 வகையான குறியீடுகள் இருக்கின்றன.
ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இந்த குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளன.
இதில் PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
அது போல் PHH- AAY என இருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம்.
NPHH என இருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
NPHH-S என இருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.
NPHH-NC என இருந்தால் எந்த பொருளும் கொடுக்கப்படமாட்டாது. ரேஷன் கார்டை ஒரு அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 1000 ரூ திட்டம் NPHH-S, NPHH-NC என்ற குறியீடு போட்டுள்ள கார்டுகளுக்கு கிடைக்காது. மற்ற குறியீடுகளுக்கு நிச்சயம் கிடைக்கும். எனவே யாரும் தேவையின்றி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்த திட்டம் விரைவில் அரசாணை வெளியாகும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்திருந்தார். மேலும் எந்த குறையும் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.




No comments
Thank you for your comments