குளத்தில் மூழ்கி பலியான குழந்தைகள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி
தென்காசி :
தென்காசி மாவட்டம்ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி பலியான குழந்தைகள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் இஷாந்த் (வயது 5). தர்மராஜ் மகன் புவன் (வயது 4). இருவரும் அண்ணன் தம்பிகள் மேலும் அவர்களது உறவினர் பூ பாலன் மகள் சண்முக பிரியா (5) இந்த மூன்று குழந்தைகளும் ஊரில் உள்ள குளத்தில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
இந்த செய்தி அறிந்து தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் பலியான குழந்தைகள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி குடும்பத்திற்கு தலா ரூபாய் 25000 நிதி உதவி வழங்கினார்
ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, MPM அன்பழகன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அலடி எழில்வாணன், தொண்டரணி சுரேஷ் கண்ணா உட்பட திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments