மனச்சோர்வுக்கும் மூளை புத்துனர்ச்சிக்கும் சிறந்த டானிக்
துளசி இலையை ஆங்கிலத்தில் "ஹோலி பேசில்" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும்.
இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை "மூலிகைகளின் ராணி" என்று வர்ணிக்கின்றனர். மேலும் துளசி இலைகளில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு. மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது. தற்போது உலகம் முழுக்க துளசி ஒரு முக்கிய புகழ்பெற்ற மூலிகையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
நமது தினசரி வாழ்வில் துளசியை அதிக பயன்பாடு கொண்டுள்ளது. நாம் துளசியின் மகத்துவத்தை அறிந்துக் கொண்டு அதனை பயன்படுத்தி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்வாங்கு வாழலாம்....
மனச்சோர்வுக்கும் மூளை புத்துனர்ச்சிக்கும் சிறந்த டானிக்
துளசி மனச்சோர்வு எதிர்ப்பியாகவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருப்பதால், ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது.
பொதுவாக துளசி, ஒரு நரம்பு ஊக்க மருந்தாக இருப்பதால், நரம்பு மண்டலத்தை சமநிலைப் படுத்தவும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும் இந்த மூலிகை உதவுவதாக அறியப்படுவதால், நரம்பு திசுக்கள் வலிமை அடைவதாக நம்பப்படுகிறது. மனத்தெளிவை ஊக்குவிக்க துளசி தேநீரில் தேன் சேர்த்து பருகலாம்.காய்ந்த துளசிப் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உட்கொள்வது பாரம்பரிய ஆயுர்வேத தயாரிப்புகளில் ஒரு வழிமுறையாகும். இதனை தினமும் உட்கொள்ளலாம்.
துளசி மாத்திரையை உட்கொள்வதற்கு மாற்றாக இந்த முறையை பின்பற்றுவதால், துளசி இலைகள் நேரடியாக செரிமான பாதைக்கு கீழ் சென்று, செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
துளசி இலையில் இருக்கும் வறண்ட தன்மை மற்றும் கசப்புத் தன்மையை குறைக்கும் விதத்தில் இதனோடு இருக்கும் தேன் இனிப்பு சுவையை கொடுக்கிறது.
👉 தேவையான பொருட்கள்
அரை அபூன் அரைத்த துளசிப் பொடி .
ஒன்று அலல்து இரண்டு ஸ்பூன் தேன்
👉 செய்முறை
துளசிப் பொடியுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த துளசி விழுதை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த துளசி தேன் சாற்றை கலந்து தயாரித்து நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நோயெதிர்ப்பு மண்டலம் புத்துணர்ச்சிக்கு ப்ரெஷ்ஷான துளசி ஜூஸ்
புதிதாகப் பறித்த துளசி இலைகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்துப் பருகலாம். இந்த சுவை மிகுந்த புத்துணர்ச்சி தரும் பானம், நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.
பாரம்பரியமாக, இந்த ஜூஸில் தேன் கலந்து, காய்ச்சல், சளி, மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது.
துளசி ஜூஸ் பருகுவதால், உடலின் வேறுபட்ட செயல்பாடுகளுக்கு சமநிலை தருவதன் மூலம் மன அழுத்தத்தை உடல் எதிர்கொள்ள உதவும்.
சருமத்தில் பூஞ்சை தொற்று பாதிப்புகளுக்கு மருந்தாகவும் துளசி சாற்றைப் பயன்படுத்தலாம்.
👉 தேவையான பொருட்கள்
அரை கப் தண்ணீர்
ஒரு கப் புதிதாகப் பறித்த துளசி இலைகள்
👉 செய்முறை
துளசி இலைகளைப் பறித்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும். துளசியுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். .
அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து, வடிகட்டியால் சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். .
இந்த துளசி ஜூஸ் பருகுவதற்கு சுவையாக இருக்கும். இதனை தினமும் பருகலாம்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குனமானவர்களுக்கு ஏற்படும் மனசோர்வு, மறதி, சுவாசம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். பூஞ்சை தொற்று ஏற்படாமல் தப்பிக்க சிறந்த மகத்துவம் நிறைந்ததாகும்...
No comments
Thank you for your comments