Breaking News

கொரோனாவை விரட்ட வீட்டிலே தயாரிக்கலாம் சூப்பரான துளசி மவுத்வாஷ் ....

துளசி இலையை ஆங்கிலத்தில் "ஹோலி பேசில்" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். 

இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை "மூலிகைகளின் ராணி" என்று வர்ணிக்கின்றனர். மேலும் துளசி இலைகளில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு. மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது.  தற்போது உலகம் முழுக்க துளசி ஒரு முக்கிய புகழ்பெற்ற மூலிகையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

நமது தினசரி வாழ்வில் துளசியை அதிக பயன்பாடு கொண்டுள்ளது.  நாம் துளசியின் மகத்துவத்தை அறிந்துக் கொண்டு அதனை பயன்படுத்தி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்வாங்கு வாழலாம்....

அற்புதமான துளசி மவுத்வாஷ் 

பலவகை பற்பசைகளின் மூலப் பொருளாக துளசி இருப்பதை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் துளசியின் மிகப் பரந்த கிருமி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, துளசி ஒரு சிறந்த மவுத்வாஷாக பயன்படுகிறது.  இந்த கொரோனா காலத்தில் இது ஒரு சிறந்த தீர்வாகும்.


பற்கள் அழுகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பாக்டீரியாவான ஸ்ட்ரெப்டோகோகுஸ் ம்யுடன்ஸ் என்ற பாக்டீரியாவைக் குறைப்பதில் துளசி சாறு நல்ல தீர்வைத் தருவதாக ஒரு மருத்துவ பரிசோதனை விளக்குகிறது. 

தினமும் துளசியைக் கொண்டு வாய் கொப்பளிப்ப்பதால், பற்களில் அழுக்கு மற்றும் கிருமிகள் படிவது தடுக்கப்படுகிறது. 


👉 தேவையான பொருட்கள் 

ஒரு கை நிறைய புதிதாகப் பறித்த துளசி இலைகள் அல்லது 2 ஸ்பூன் அளவு காய்ந்த துளசி இலைகள் . 

ஒரு கப் தண்ணீர் 

ஒரு ஸ்பூன் வோட்கா (தேவைப்பட்டால்) 

👉 எளிய செய்முறை 

ஒரு பாத்திரத்தில் துளசி இலைகளை வைத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, துளசி இருக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். 

பிறகு அந்த துளசி சாறு நீரில் இறங்கும் வரை சுமார் 20 நிமிடங்கள் அந்தப் பாத்திரத்தை மூடி வைக்கவும். 

இருபது நிமிடம் கழித்து அந்த நீரில் இருந்து துளசியை வடிகட்டி அந்த நீரை ஒரு ஜார் அல்லது பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். 

அந்த நீர் அறை வெப்ப நிலைக்கு வரும்வரை காத்திருக்கவும். வோட்கா சேர்ப்பதால் நான்கு முதல் ஐந்து நாட்கள் பிரிட்ஜில் வைத்து மவுத்வாஷ் கெடாமல் பாதுகாக்கலாம். 

தினமும் 20-30 நொடிகள் இந்த மவுத்வாஷ் கொண்டு வாயைக் கழுவி கொப்பளித்து வரலாம். 

பாட்டிலை மூடி வைத்து பிரிட்ஜில் வைக்கவும். வோட்கா சேர்க்காமல் தயாரிக்கும் மவுத்வாஷ் இரண்டு முதல் மூன்று நாட்கள் பிரிட்ஜில் நன்றாக இருக்கும்.

இந்த துளசி மவுத்வாஷ் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி வந்தால் கொரோனவை அண்டவிடாமல் விரட்டலாம்...

வாழ்க வளமுடன்.... 

No comments

Thank you for your comments