Breaking News

டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை...

காட்பாடி கசம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை புதிய இடத்திற்கு மாற்ற கூடாது என பொதுமக்கள் முற்றுகை...


காட்பாடி கசம் பகுதியில்  டாஸ்மாக் கடை உள்ளது இந்த கடையில் சில மாதங்களுக்கு முன்னால் திருட்டு நடந்தது உயர் அதிகாரிகள் கலந்து பேசி டாஸ்மாக் கடையே வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி இன்று (15-07-2021) காலை 10:30 மணியளவில் புதியதாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி முற்றுகையில் ஈடுப்பட்டனர். இங்கு அதிகமான வீடு உள்ளது, இங்கு கடை வைக்க அனுமதிக்க மாட்டோம் என கோஷம் எழுப்பினர். 

இந்நிலையில், உடனே திருவலம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி அவர்களும் காட்பாடி வட்டாசியர் பாலமுருகன் அவர்களும் இணைந்து பொதுமக்களிடம் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதிய இடத்திற்கு கடையே திறக்க மாட்டோம், அந்த கடை தற்போது இருக்கின்ற இடத்திலே இருக்கட்டும் என தெரிவித்தனர். அவர்கள் சொன்ன அறிவுரை கேட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதானல் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..

No comments

Thank you for your comments