இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து வெற்றி... அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டோக்கியோ,
தற்போதைய உலக பேட் மின்டன் சாம்பியனான பிவி சிந்து 2-வது சுற்றில் ஹாங்காங் வீராங்கனையைத் தோற்கடித்து கால் இறுதி ஆட்டத்துக்கு முந்திய சுற்றில் விளையாட தகுதி பெற்றார்.
ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற 26 வயது பி.வி. சிந்து புதன்கிழமை அன்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை 21 - 9, 21 - 16 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார் இரண்டாவது சுற்று போட்டி ஆட்டங்கள் மட்டும் 35 நிமிடங்கள் தான் நடந்தது.
ஹாங்காங் பேட்மிட்டன் வீராங்கனையை சிந்து வெல்வது ஆறாவது தடவையாகும் .
அடுத்த சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியா ப்ளீசெப்ல்டை சிந்து சந்திக்க இருக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பேட்மிட்டன் போட்டியில் புதன்கிழமையன்று இந்தியாவில் சாய் ராணிக்கு நெதர்லாந்து வீரரை எதிர்த்து போராட இருக்கிறார்.
No comments
Thank you for your comments