கழிவுநீர் அகற்றாததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கழிவுநீர் அகற்றாததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுப்பாக்கம் கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகில் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள சாலைகளில் கழிவுநீர் தேங்கி உள்ளன. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்றுகள் உருவாகின்றன .
இந்நிலையில் அவற்றை அகற்ற கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments